Showing posts with label கணினி வரைகலை. Show all posts
Showing posts with label கணினி வரைகலை. Show all posts

Monday, 28 May 2012

கம்ப்யூட்டர் கலைடாஸ்கோப் !

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் கலைடாஸ்கோப் வாங்கியிருக்கிறீர்களா! கண்ணாடித்துண்டுகள் மற்றும் வளையல் துண்டுகள் ஒளி எதிரொளிப்பு முறையில் ஏராளமான டிசைன்களை உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்திருக்கிறீர்களா! இந்த வகையான டிசைன்கள் தொழில்முறையில் பல டிசைன்களை உருவாக்கப் பயன்படுவதாக அறிவியல் பாடப்புத்தகத்திலும் படித்திருப்போம்.
இதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பல அருமையான டிசைன்களை உருவாக்கித் தருகிறது இத்தளம். மாதிரி பேட்டர்னில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நகர்த்த நமது கண்ணுக்கு விரு்ந்தளிக்கும் பல அருமையான டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான டிசைன்களைக் கண்டு ஆச்சரியத்தில் நமது கண்கள் விரிகின்றன. இந்த அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
இந்த டிசைன்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யவும் முடிவதால், பல வடிவமைப்புகளில் இந்த டிசைன்களைப் பயன்படுத்த முடிகிறது. பணம் செலுத்திப் பதிவு செய்து கொண்டால் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.
போட்டோஷாப்பில் பத்து முதல் இருபது நிமிடம் வரை செய்யக்கூடிய வேலையை சில நொடிகளில் செய்து முடிக்க முடிகிறது. வரைகலைஞர்கள் அவசியம் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அவசியம் ரசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, 21 May 2012

கிராபிக் டிசைனிங் அடிப்படை நுணுக்கங்கள்

இந்த வலைத்தளத்தில் கிராபிக் டிசைனிங் பற்றிய அடிப்படை நுணுக்கங்கள், அடிப்படையான கொள்கைகள், சிடிகவர் தயாரித்தல், லோகோ தயாரித்தல், புத்தக அட்டைவடிவமைப்பு, விசிட்டிங் கார்டுகள் வடிவமைப்பு, மற்றும் இது தொடர்பான இணைய ரிசோர்ஸ்கள், மற்றும் டுடோரியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வரைகலைஞர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். உயர்த்துவோம் நம் கலையை உலகத்தரத்திற்கு.

Thursday, 22 March 2012

வரைகலை-6 கணினி வரைகலைக்கான முதல் தமிழ் மின்னிதழ்

வரைகலைஞர்கள் அனைவரும் பின்வரும் அறிவிப்பை கவனமாக படித்து   விலையில்லா மின் இ த ழை பயன்படுத்தி பயனடையுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அன்புடையீர், வணக்கம்.


நமது பயிலகம் வெளியிட்டுவந்த கணினி வரைகலையின் சங்கமம் இதழ் தற்போது மின்னிதழாக உருமாறியுள்ளது. ஆம், மாற்றங்கள் உலக நியதி என்பதன் அடிப்படையில், இதுவரையிலும் அச்சிதழாக வெளியிடப்பட்ட சங்கமம் இதழும், கணினி தொழில்நுட்பத்தின் மாறுதலுக்கு ஏற்ப, இனி மின்-நூலாக மாறுதலைப் பெற்றுள்ளது; மறு அவதாரம் எடுக்கின்றது.

இதனால், கணினி வரைகலைப் பகுதிக்காகத் தமிழில் வெளிவரும் முதல் மின்னிதழ் என்ற பெருமையையும் பெறுகின்றது.

வழக்கம்போல, தொழில்நுட்பக் கட்டுரைகள், செயல்முறை பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்தும் - வழக்கத்தைவிட மாறுபட்ட முறையில் - முழுமையான வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுத் தரப்படவுள்ளன.

இதற்காக எந்தவித சந்தா தொகையும் பெறப்போவது இல்லை.
ஆம்! கணினி வரைகலையின் சங்கமம் இனி விலையில்லா இதழாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்!

பின்வரும் வலைதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இணையம் வழியாகவே அனுப்புங்கள். இதன் தொடர்ச்சியாக, நீங்கள் கொடுக்கும் அஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் அட்‌டையில் ஒரு வரிசை எண்ணை உங்களுக்கு அனுப்புகின்றோம். அதனை மின்னஞ்சல் (மேற்படி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி) வழியே எங்களுக்குத் தெரிவித்தால் போதும். இதன் தொடர்ச்சியாக இனி எப்போதும் சங்கமம் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் வந்து சேர்க்கப்பட்டுவிடு்ம்.

www.veeranathan.com/sangamam.php

இது தொடர்பாக மேலதிகத் தகவலுக்குத் தொடர்புகொளளவும் :
செல்பேசி : 98422-13782, 99444-13782 மின்னஞ்சல் : sangamamfrombicg@yahoo.com


என்றும் உங்கள் நல்லாதரவினை எதிர்ந‌ோக்கும்,


ஜெ. வீரநாதன்
Veeranathan, J
Balaji Institute of Computer Graphics
Exclusive Training center for CGD / Publisher & Seller of Books
167, Police Kandasamy Street, Olympus, Ganeshapuram
Ramanathapuram, Coimbatore - 641 045, India
Phone : Off. 0422-2323228, Cell : 98422-13782 Mobile : 99444-13782
E-mail : balajiicg@yahoo.com Web : http://www.veeranathan.com
Blog : http://balajiicg.blogspot.com (பயிலகம் தொடர்பான செய்திகளுக்கு)
http://sangamamfrombicg.blogspot.com (கணினி வரைகலைத் தொடர்பான கட்டுரைகளுக்கு)

Sunday, 5 February 2012

வரைகலை-5 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள்-5


பக்கம் பக்கமாக வரைகலை பற்றி பேசுவதையும் எழுதுவதையும் விட நல்ல முன்மாதிரியாக சில படைப்புகளை படைத்து விடுவது என்பது மிகுந்த பயனளிக்கக்கூடியது. அந்த வகையில் Chandran Scrap Book  என்ற இந்த வலைப்பதிவு வரைகலைக்கு மிகுந்த பங்களித்ததாகிறது. தமிழகத்தின் பல முன்னணி நிறுவனங்களுக்கு இவர்கள் கணினி வரைகலை மூலம் பொலிவு சேர்த்திருக்கிறார்கள்.

விளம்பரங்களில் வடிவமைப்பின் தரமும், கற்பனையும் நம்மை வியக்கச் செய்கிறது. ஆஹா எப்.எம், சென்னைசில்க்ஸ், குமரன் சில்க்ஸ், குமுதம், சன்டைரக்ட், தினமலர், வுட்பெக்கர், பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ்,இமயம் நெய், அரசு பால்,  என இவர்களது பட்டியல் நீளுகிறது. மாதிரிக்காக வடிவமைப்புகள் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன. 

வரைகலைஞர்கள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படத்தக்க சிறந்த வடிவமைப்புகள் இவை. சந்திரன் ஆர்ட் ஒர்க் மென்மேலும் சிறந்து வளர வரைகலைஞன் வாழ்த்துகிறது.

Friday, 18 November 2011

வரைகலை-4 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள்-4

கோயம்புத்துர் பாலாஜி கணினி வரைகலைப்பயிலகத்தின் சங்கமம் - பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்திலிருந்து என்ற வலைப்பதிவை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறோம். 

 அப்பயிலகத்தின் மற்றுமொரு வலைப்பதிவான ‘‘கணினி வரைகலைப் பக்கங்கள்’’ http://balajiicg.blogspot.com  வரைகலைஞர்களுக்கு பயனுள்ள ஒரு வலைப்பதிவாகும். 

இவ்வலைப்பதிவில் உள்ள ‘‘ஏன் இன்டிசைன்?” மற்றும் ‘‘அச்சு Vs இணையம்’’ ஆகிய கட்டுரைகள் மிகுந்த பயனுடையவையாக உள்ளன. வரைகலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Thursday, 3 November 2011

வரைகலை-3 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள் -3

கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகளை தேடிக்கொண்டிருக்கையில் மனம்+  என்ற வலைப்பதிவை காண நேர்ந்தது. அனிமேஷன் மென்பொருளான அடோப் ஃபிளாஷ் குறித்து அநேகமான பதிவுகள்(66)  சிறப்பாக இருக்கின்றன.  போட்டோஷாப் குறித்து தரப்பட்ட பதிவுகள்(22) மிக அருமையாக உள்ளன.

கணினி வரைகலைஞர்களுக்கு பயனுள்ள பதிவுகளை தரும் மனம்+ மென்மேலும் வளர வரைகலைஞன் வாழ்த்துகிறது.


Monday, 31 October 2011

வரைகலை-2 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள்


கணினி வரைகலையில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு.ஜெ.வீரநாதன் அவர்களுக்கு, இந்திய மொழிகளில் கணினி வரைகலையின் பிரதான மென்பொருள்களான பேஜ்மேக்கர், போட்டோஷாப், கோரல்டிரா, இன்டிசைன், மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும் விரிவான விளக்கங்களுடன் புத்தகம் எழுதிய ஒரே ஆசிரியர் என்ற பெருமை உண்டு. இவரது கோரல்டிரா பற்றிய புத்தகமான சித்திரமும் மவுஸ் பழக்கம்தமிழக அரசின் விருது பெற்றது.

கோயம்புத்தூரில் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் என்ற பெயரில் கணினி வரைகலைக்கான அனைத்து மென்பொருள்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார். தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் இவரிடம் ஏராளமானோர் கணினி வரைகலையில் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிலகம் கணினி வரைகலையின் சங்கமம் என்ற மாத இதழையும் நடத்தி வந்தது.

இப்பயிலகத்தின் வலைப்பதிவான சங்கமம் - பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்திலிருந்துhttp://sangamamfrombicg.blogspot.com கணினி வரைகலை பற்றிய பதிவுகளையும், அப்பயிலகம் அளிக்கும் சிறப்பு பயிற்சிகள் பற்றிய பதிவுகளையும் உள்ளடக்கியது. பார்கோடுகள் பற்றிய சமீபத்திய பதிவு கணினி வரைகலைஞர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது. 


கணினி வரைகலைக்கு இப்பயிலகம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் வரைகலைஞன் பெருமை கொள்கிறது.

http://sangamamfrombicg.blogspot.com






Friday, 28 October 2011

வரைகலை-1 கணினி வரைகலை குறித்த தரமான வலைப்பதிவுகள்-1

நான் பதிவுகள் இடும் முன் தமிழில் கணினி வரைகலை குறித்த அல்லது கணினி வரைகலைஞர்களுக்கு பயனளிக்கும் வலைப்பதிவுகள் குறித்து பதிவுகள் இடுவது பொருத்தமானதாகவும் பயனுடையதாகவும் இருக்கும் என கருதுகிறேன்.
இவ்வகையில் வரைகலையின் பிரதானமான மென்பொருளான போட்டோஷாப் குறித்து பல வலைப்பதிவுகள் இருக்கின்றன. என்னைக் கவர்ந்த வலைப்பதிவாக ”சித்திரம் பேசுதடி” பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  போட்டோஷாப்பில் நாம் வழக்கமாக செய்யும் வேலைகள் மட்டுமல்ல பிற எபெக்ட்கள் மற்றும் அனிமேஷன்களையும் அருமையாக விளக்கியுள்ளார். இவரது பணி மென்மேலும் தொடர வரைகலைஞன் வாழ்த்துகிறது.