பக்கம் பக்கமாக வரைகலை பற்றி பேசுவதையும்
எழுதுவதையும் விட நல்ல முன்மாதிரியாக சில படைப்புகளை படைத்து விடுவது என்பது
மிகுந்த பயனளிக்கக்கூடியது. அந்த வகையில் Chandran Scrap Book என்ற இந்த வலைப்பதிவு வரைகலைக்கு
மிகுந்த பங்களித்ததாகிறது. தமிழகத்தின் பல முன்னணி நிறுவனங்களுக்கு இவர்கள் கணினி
வரைகலை மூலம் பொலிவு சேர்த்திருக்கிறார்கள்.
விளம்பரங்களில் வடிவமைப்பின் தரமும், கற்பனையும் நம்மை வியக்கச் செய்கிறது. ஆஹா எப்.எம், சென்னைசில்க்ஸ், குமரன் சில்க்ஸ், குமுதம், சன்டைரக்ட், தினமலர், வுட்பெக்கர், பில்ராத் ஹாஸ்பிட்டல்ஸ்,இமயம் நெய், அரசு பால், என இவர்களது பட்டியல் நீளுகிறது. மாதிரிக்காக
வடிவமைப்புகள் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்பட்டுள்ளன.
வரைகலைஞர்கள்
முன்மாதிரியாகக் கொண்டு செயல்படத்தக்க சிறந்த வடிவமைப்புகள் இவை. சந்திரன் ஆர்ட் ஒர்க்
மென்மேலும் சிறந்து வளர வரைகலைஞன் வாழ்த்துகிறது.
