Thursday, 24 April 2025

மாணவர் தரநிலை கணக்கீடு

 



மாணவர் தரநிலை கணக்கீடு

மாணவர் தரநிலை கணக்கீடு

Tuesday, 16 October 2012

போட்டோஷாப்பின் ஏ.பி.சி.டீ...



A முதல் Z வரை அனைத்து எழுத்துக்களும் போட்டோஷாப் ஷார்ட்கட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதோ பாருங்கள் போட்டோஷாப்பின் ஏ.பி.சி.டி யை
  • A – Path Selection Tool
  • B – Brush Tools
  • C – Crop Tools
  • D – Restore Default Swatches
  • E – Eraser Tools
  • F – Toggle Screen mode
  • G – Gradient TOol
  • H – Hand Tool
  • I – Eyedropper tool
  • J – Spot Healing Brush
  • K – 3D Tools
  • L – Lasso Tools
  • M – Marquee Tools
  • N – 3D Camera Tools
  • O – Dodge
  • P – Pen Tool
  • Q – Quick Mask
  • R – Rotate Tool
  • S – Clone Stamp
  • T – Type Tool
  • U – Rectangle Tool (Vector Shapes)
  • V – Move Tool
  • W – Magic Wand
  • X – Toggle Foreground Background Swatch
  • Y – History Brush
  • Z – Zoom
    கீபோர்டில் வேறு எந்த கீயையும் விட்டு வைக்கவில்லை போல. கீழே லிஸ்டைப் பாருங்கள்
  • Number Keys – Change opacity (Of layer or brush tool)
  • [] – Change size of brush
  • ,. – Change to previous/next brush
  • ;’ – Change magnetic lasso frequency
  • / – Locks transparency in a layer
  • \ – Displays Layer mask as rubylith overlay

Tuesday, 9 October 2012

செந்தமிழ் எழுத்துருவை யுனிகோட் வடிவிற்கு மாற்ற....

பொதுவாக அச்சுத்துறையிலும், கணினி வரைகலையிலும் இன்னும் செந்தமிழ் எழுத்துருவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
NHM Converter மூலம் அதனை யுனிகோட் எழுத்துருவிற்கு மாற்றம் செய்ய இயலாததால் வேறு வழிகள் இல்லாமல் பல மாதங்களாக சிரமமாக இருந்து வந்தது.
தற்போது ஆன்லைன் தமிழ் எழுத்துரு மாற்றியான பொங்குதமிழ் எழுத்துரு மாற்றியில் இந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
 செந்தமிழ் எழுத்துருவில் உள்ள நமது டாக்குமென்டில் இருந்து டெக்ஸ்டை காப்பி செய்து அம்புக்குறியிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ள இடத்தில்  பேஸ்ட் செய்யவும்.
தற்போது நக்கீரன்  (செந்தமிழ்) என்பதை தேர்வு செய்தால் கீழே உள்ள கட்டத்தில்
யுனிகோட் எழுத்துருவில் உங்களது டெக்ஸ்ட் காட்சியளிப்பதைக் காணலாம்.
இதனை காப்பி செய்து நீங்கள் தேவையான இடத்தில் (வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், சமுக வலைத்தளங்கள்....) பயன்படுத்தலாம்.
நண்பர்களே. பயனுள்ள இந்த வசதியை பயன்படுத்திப் பயன்பெறுங்கள். வேறு பல வகையான எழுத்துருக்களையும் இது யுனிகோட் முறைக்கு மாற்றித் தருகிறது,
(வேறு ஏதேனும் ஆஃப்லைன் மென்பொருள்கள் இந்த வசதியுடன் இருப்பின் தெரிவிக்கவும். பலருக்குப் பயனுடையதாக இருக்கும்)

Friday, 13 July 2012

கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம். நமது அதிர்ச்சியும் அஞ்சலியும்!

கணினித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடி ஆண்டோ பீட்டர் மரணம்

காலமான ஆண்டோ பீட்டர்
கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார்.
அவர் தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
உத்தமம் என்ற அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.

மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர்.
இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.
இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு என்று பல்துறையினர் வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளனர்.
தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்திய ஒரு முன்னோடியாக ஆண்டோ பீட்டர் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நன்றி பிபிசி செய்தி
என்னைப் போன்று ஆயிரக்கணக்கானோருக்கு தமிழில் கணினியை அறிமுகம் செய்து வைத்த, கணினி வரைகலைக்கும், தமிழ் கணினி வளர்ச்சிக்கும் அதிக பங்களித்த அன்னாரின் மறைவுக்கு நமது ஆழ்ந்த அதிர்ச்சியையும், அன்னாரது குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 28 May 2012

கம்ப்யூட்டர் கலைடாஸ்கோப் !

சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் கலைடாஸ்கோப் வாங்கியிருக்கிறீர்களா! கண்ணாடித்துண்டுகள் மற்றும் வளையல் துண்டுகள் ஒளி எதிரொளிப்பு முறையில் ஏராளமான டிசைன்களை உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியை ரசித்திருக்கிறீர்களா! இந்த வகையான டிசைன்கள் தொழில்முறையில் பல டிசைன்களை உருவாக்கப் பயன்படுவதாக அறிவியல் பாடப்புத்தகத்திலும் படித்திருப்போம்.
இதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு பல அருமையான டிசைன்களை உருவாக்கித் தருகிறது இத்தளம். மாதிரி பேட்டர்னில் உள்ள ஸ்லைடரை நகர்த்த நகர்த்த நமது கண்ணுக்கு விரு்ந்தளிக்கும் பல அருமையான டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான டிசைன்களைக் கண்டு ஆச்சரியத்தில் நமது கண்கள் விரிகின்றன. இந்த அனுபவத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
இந்த டிசைன்களை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்யவும் முடிவதால், பல வடிவமைப்புகளில் இந்த டிசைன்களைப் பயன்படுத்த முடிகிறது. பணம் செலுத்திப் பதிவு செய்து கொண்டால் கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.
போட்டோஷாப்பில் பத்து முதல் இருபது நிமிடம் வரை செய்யக்கூடிய வேலையை சில நொடிகளில் செய்து முடிக்க முடிகிறது. வரைகலைஞர்கள் அவசியம் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அவசியம் ரசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, 21 May 2012

கிராபிக் டிசைனிங் அடிப்படை நுணுக்கங்கள்

இந்த வலைத்தளத்தில் கிராபிக் டிசைனிங் பற்றிய அடிப்படை நுணுக்கங்கள், அடிப்படையான கொள்கைகள், சிடிகவர் தயாரித்தல், லோகோ தயாரித்தல், புத்தக அட்டைவடிவமைப்பு, விசிட்டிங் கார்டுகள் வடிவமைப்பு, மற்றும் இது தொடர்பான இணைய ரிசோர்ஸ்கள், மற்றும் டுடோரியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வரைகலைஞர்கள் பயன்படுத்திப் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். உயர்த்துவோம் நம் கலையை உலகத்தரத்திற்கு.

Thursday, 22 March 2012

வரைகலை-6 கணினி வரைகலைக்கான முதல் தமிழ் மின்னிதழ்

வரைகலைஞர்கள் அனைவரும் பின்வரும் அறிவிப்பை கவனமாக படித்து   விலையில்லா மின் இ த ழை பயன்படுத்தி பயனடையுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அன்புடையீர், வணக்கம்.


நமது பயிலகம் வெளியிட்டுவந்த கணினி வரைகலையின் சங்கமம் இதழ் தற்போது மின்னிதழாக உருமாறியுள்ளது. ஆம், மாற்றங்கள் உலக நியதி என்பதன் அடிப்படையில், இதுவரையிலும் அச்சிதழாக வெளியிடப்பட்ட சங்கமம் இதழும், கணினி தொழில்நுட்பத்தின் மாறுதலுக்கு ஏற்ப, இனி மின்-நூலாக மாறுதலைப் பெற்றுள்ளது; மறு அவதாரம் எடுக்கின்றது.

இதனால், கணினி வரைகலைப் பகுதிக்காகத் தமிழில் வெளிவரும் முதல் மின்னிதழ் என்ற பெருமையையும் பெறுகின்றது.

வழக்கம்போல, தொழில்நுட்பக் கட்டுரைகள், செயல்முறை பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்தும் - வழக்கத்தைவிட மாறுபட்ட முறையில் - முழுமையான வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுத் தரப்படவுள்ளன.

இதற்காக எந்தவித சந்தா தொகையும் பெறப்போவது இல்லை.
ஆம்! கணினி வரைகலையின் சங்கமம் இனி விலையில்லா இதழாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்!

பின்வரும் வலைதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இணையம் வழியாகவே அனுப்புங்கள். இதன் தொடர்ச்சியாக, நீங்கள் கொடுக்கும் அஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சல் அட்‌டையில் ஒரு வரிசை எண்ணை உங்களுக்கு அனுப்புகின்றோம். அதனை மின்னஞ்சல் (மேற்படி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி) வழியே எங்களுக்குத் தெரிவித்தால் போதும். இதன் தொடர்ச்சியாக இனி எப்போதும் சங்கமம் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் வந்து சேர்க்கப்பட்டுவிடு்ம்.

www.veeranathan.com/sangamam.php

இது தொடர்பாக மேலதிகத் தகவலுக்குத் தொடர்புகொளளவும் :
செல்பேசி : 98422-13782, 99444-13782 மின்னஞ்சல் : sangamamfrombicg@yahoo.com


என்றும் உங்கள் நல்லாதரவினை எதிர்ந‌ோக்கும்,


ஜெ. வீரநாதன்
Veeranathan, J
Balaji Institute of Computer Graphics
Exclusive Training center for CGD / Publisher & Seller of Books
167, Police Kandasamy Street, Olympus, Ganeshapuram
Ramanathapuram, Coimbatore - 641 045, India
Phone : Off. 0422-2323228, Cell : 98422-13782 Mobile : 99444-13782
E-mail : balajiicg@yahoo.com Web : http://www.veeranathan.com
Blog : http://balajiicg.blogspot.com (பயிலகம் தொடர்பான செய்திகளுக்கு)
http://sangamamfrombicg.blogspot.com (கணினி வரைகலைத் தொடர்பான கட்டுரைகளுக்கு)